BREAKING NEWS
latest

Fire Accident - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Fire Accident செய்திகள், கட்டுரைகள், Fire Accident புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Wednesday, January 10, 2024

குளிர்காய நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இரண்டு தமிழர்கள் தமாமில் உயிரிழந்தனர்:

சவுதி அரேபியாவின் தம்மாமில் உள்ள தங்களுடைய குடியிருப்பில் நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இந்தியாவைச் சேர்த்த இருவர் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்

Image credit: உயிரிழந்த தமிழர்கள்

குளிர்காய நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இரண்டு தமிழர்கள் தமாமில் உயிரிழந்தனர்

சவுதி அரேபியாவின் தம்மாமில் உள்ள தங்களுடைய குடியிருப்பில் நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இந்தியாவைச் சேர்த்த இருவர் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் அங்கு வீட்டு ஓட்டுநர்களாக வேலை செய்து வந்தனர். உயிரிழந்தவர்கள் விபரங்கள் வெளியாகியுள்ளது. வாளமங்கலத்தை சேர்ந்த தாஜ் முஹம்மது மீரா மொய்தீன்(வயது-42) மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த முஸ்தபா முஹம்மதலி(வயது-66) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் குளிர்காலம் கடுமையாக நிலவி வருகின்ற நிலையில் குளிரில் இருந்து தப்ப நெருப்பு முட்டியதே இந்த துயரமான சம்பவம் ஏற்பட காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரியை பயன்படுத்தி உணவு சமைத்த பிறகு, குளிரில் இருந்து தப்பித்து தூங்குவதற்காக மீதமுள்ள நிலக்கரியை அறையில் தீப்படுக்கை தயார் செய்தனர். அவர்கள் தூங்கும் போது அறையில் இருந்த புகையை சுவாசித்ததால் மூச்சு திணறி உயிரிழந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், புகையை சுவாசித்ததே மரணத்திற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருவரும் வேலைக்கு வராத காரணத்தால் தேடிய பொது காலையில் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இருவரும் ஒரே ஸ்பான்சரின் கீழ் பணிபுரிந்து வந்தவர்கள். முஸ்தபா 38 வருடங்களாக இந்த ஸ்பான்சரின் கீழ் ஹவுஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார் என்பது குறி்ப்பிடத்தக்கது. நடைமுறைகள் முடிந்த பின் தம்மாமில் உடல் அடக்கம் செய்யப்படும் என சமூக ஆர்வலர் நாஸ் வக்கம் தெரிவித்தார். குளிர் காலநிலையில் தீமூட்டி குளிர் காய்தல் மற்றும் மின்சார ஹீட்டர்களைப் பயன்படுத்தும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிவில் பாதுகாப்பு மீண்டும் வலியுறுத்தியது. தமாமில் உள்ள கதீஃப்பில் என்ற இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற விபத்தில் கேரளாவை சேர்ந்த இருவர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு விழிப்புணர்வுகள் செய்ததாலும் குவைத் உட்பட வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த சாதாரண தொழிலாளர்கள் குளிரில் இருந்து தப்பிக்க இதுபோன்று தீ மூட்டி மூச்சுத்திணறி உயிரிழப்பது தொடர்கதை ஆகிறது. குவைத்திலும் கடந்த சில வருடங்களில் தமிழர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இதே காரணத்திற்காக உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குவைத் தீயணைப்பு துறையையும் குளிர்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை நேற்று முன்தினம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் முக்கியமாக மூடிய காற்றே வாராத அறைகளில் நிலக்கரி மற்றும் கரிக்கட்டை பயன்படுத்தி தீப்படுக்கை தயார் செய்ய கூடாது என்று எச்சரிக்கையாக வெளியிட்டுள்ளது. அப்படி செய்தால் தூங்கும் முன்னர் அதை அணைத்து விட்டு தூங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Workers | Fire Accident | Death Dammam

Add your comments to Search results for Fire Accident

Sunday, February 11, 2024

குவைத்தின் சால்மியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது

குவைத்தின் சால்மியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான தீவிபத்தில் 11 பேர் வரையில் காயமடைந்தனர்

Image: தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பு

குவைத்தின் சால்மியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது

குவைத்தில் இன்று(11/02/23 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை Al-Bidaa மற்றும் Salmiya-வைச் சேர்ந்த தீயணைப்புபடை வீரர்கள் பிரிவு, தேடல் மற்றும் மீட்புக் குழுக்களுடன் இணைந்து சால்மியா பகுதியில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான தீயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர்.

Image : மீட்பு நடவடிக்கையில் வீர்கள்

தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் 11 நபர்களுக்கு மேல் காயங்கள் ஏற்பட்டன எனவும், மீட்கப்பட்ட அனைவருக்கும் காயங்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் என்ற செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது. இவர்கள் எந்த நாட்டவர்கள் மற்றும் இவர்களுடைய நிலைமை குறித்த கூடுதல் விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Fire Accident | Salmiya Apartment | Today Morning

Add your comments to Search results for Fire Accident

Sunday, July 16, 2023

சவுதியில் பெரும் தீ விபத்து 5 இந்தியர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

சவுதி அரேபியாவில் உள்ள அல் ஹஸ்ஸாவின் ஹுஃபுஃபில் தொழில்துறை பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்

Image : தீயிணை அணைக்கும் காட்சி

சவுதியில் பெரும் தீ விபத்து 5 இந்தியர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணமான அல்-ஹஸ்ஸாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 இந்தியர்கள் உட்பட 10 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அல் ஹஸ்ஸாவின் ஹுஃபுஃபில் தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு பட்டறையில் நேற்று(14/07/23) மாலையில் தீ விபத்து ஏற்பட்டது. நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, பட்டறையில் வேலை செய்த 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அடையாளம் காணப்பட்ட 8 பேரில் 5 பேர் இந்தியர்கள் மற்றும் 3 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள இருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை

அடையாளம் காணப்பட்ட 5 இந்தியர்களில் ஒருவர் விபரங்கள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம், திருவனந்தபுரம் நெடுமங்காடு அடுத்த அழிக்கோடு அருகே வசித்து வந்த அஜ்மல் ஷாஜகான் என்கிற நிஜாம் என்பவர் என்று தெரிய வந்துள்ளது. மற்ற 4 பேர் இந்தியாவில் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. அதேபோல் இருவர் அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது. கார் பணிமனையில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது. இறந்தவர்கள் பட்டறைக்கு மேலே வசித்தவர்கள். உடல்கள் அல் ஹாசா சென்டரல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன. பல்வேறு இடங்களில் இருந்து வந்த 10 தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை

Saudi Arabia | Fire Accident | Indians Died

Add your comments to Search results for Fire Accident

Sunday, April 16, 2023

துபாயில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 16 பேர் வரையில் உயிரிழந்தனர்

அமீரகத்தில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்து நான்கு இந்தியர்கள் உள்ளிட்ட 16 பேர் பலி மற்றும் 9 பேர் காயமடைந்ததனர்

Image : உயிரிழந்த 4 இந்தியர்கள்

துபாயில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 16 பேர் வரையில் உயிரிழந்தனர்

துபாயில் உள்ள தேராவில் ஏற்பட்ட தீ விபத்தில் மலையாள தம்பதிகள் உட்பட 16 பேர் வரையில் உயிரிழந்தனர். மேலும் ஒன்பது பேர் காயமடைந்ததாக துபாய் சிவில் டிஃபென்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அல் ராஸ் பகுதியில் உள்ள ஃபிர்ஜ் முராரில் உள்ள தலால் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்தில் உள்ள சமூக சேவகர் நசீர் வதனாபள்ளி கூறுகையில், தீ விபத்தில் கேரளா தம்பதி உட்பட 4 இந்தியர்கள் உயிரிழந்தனர் எனவும், இதில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார். இதை தவிர மூன்று பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்த பாகிஸ்தான் நாட்டவர்கள் மற்றும் ஒரு நைஜீரிய பெண் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த மற்றவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியர்கள் யாராவது உள்ளார்களா என்பது மருந்துவ அறிக்கை வந்த பிறகே தெரியவரும். அதேபோல் காயமடைந்த 9 பேர் எந்தெந்த நாட்டவர்கள் என்ற விபரங்களும் வரும் மணிநேரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.

உயிரிழந்த 4 இந்தியர்கள் விபரங்கள் வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த காவலாளியாக வேலை செய்துவந்த ரபீக் மற்றும் பெயிண்டிங் தொழிலாளியாக வேலை செய்துவந்த இமாம் காசிம் ஆகியோர் தீயினை அணைக்கும் முயற்சியில் உயிரிழந்தனர். உயிரிழந்த கேரளா தம்பதியினர் விவரங்களும் வெளியாகியுள்ளது. மலப்புரம் வெங்கரைச் சேர்ந்த களங்கடன் ரிஜேஷ், அவரது மனைவி ஜிஷி என்பதும் தெரியவந்துள்ளது. இறந்த ரிஜேஷ் தேராவில் டிராவல்ஸ் நிறுவன ஊழியராக உள்ளார். இவரது மனைவி ஜிஷி கிசைஸ் கிரசண்ட் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.பக்கத்து அறையில் தீப்பிடித்ததால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி ரிஜேஷ் மற்றும் அவரது மனைவி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் ரஷித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த கட்டிடத்தில் சனிக்கிழமை(நேற்று) மதியம் 12.35 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஐந்து மாடிக் கட்டிடத்தின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக ஏசி வெடித்து தீப்பிடித்ததாக முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சிவில் பாதுகாப்பு துறையின் செய்தி தொடர்பாளர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Indians Death | Fire Accident | Dubai News

Add your comments to Search results for Fire Accident