BREAKING NEWS
latest

Tamil Workers - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Tamil Workers செய்திகள், கட்டுரைகள், Tamil Workers புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Wednesday, January 10, 2024

குளிர்காய நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இரண்டு தமிழர்கள் தமாமில் உயிரிழந்தனர்:

சவுதி அரேபியாவின் தம்மாமில் உள்ள தங்களுடைய குடியிருப்பில் நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இந்தியாவைச் சேர்த்த இருவர் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்

Image credit: உயிரிழந்த தமிழர்கள்

குளிர்காய நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இரண்டு தமிழர்கள் தமாமில் உயிரிழந்தனர்

சவுதி அரேபியாவின் தம்மாமில் உள்ள தங்களுடைய குடியிருப்பில் நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இந்தியாவைச் சேர்த்த இருவர் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் அங்கு வீட்டு ஓட்டுநர்களாக வேலை செய்து வந்தனர். உயிரிழந்தவர்கள் விபரங்கள் வெளியாகியுள்ளது. வாளமங்கலத்தை சேர்ந்த தாஜ் முஹம்மது மீரா மொய்தீன்(வயது-42) மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த முஸ்தபா முஹம்மதலி(வயது-66) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் குளிர்காலம் கடுமையாக நிலவி வருகின்ற நிலையில் குளிரில் இருந்து தப்ப நெருப்பு முட்டியதே இந்த துயரமான சம்பவம் ஏற்பட காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரியை பயன்படுத்தி உணவு சமைத்த பிறகு, குளிரில் இருந்து தப்பித்து தூங்குவதற்காக மீதமுள்ள நிலக்கரியை அறையில் தீப்படுக்கை தயார் செய்தனர். அவர்கள் தூங்கும் போது அறையில் இருந்த புகையை சுவாசித்ததால் மூச்சு திணறி உயிரிழந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், புகையை சுவாசித்ததே மரணத்திற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருவரும் வேலைக்கு வராத காரணத்தால் தேடிய பொது காலையில் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இருவரும் ஒரே ஸ்பான்சரின் கீழ் பணிபுரிந்து வந்தவர்கள். முஸ்தபா 38 வருடங்களாக இந்த ஸ்பான்சரின் கீழ் ஹவுஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார் என்பது குறி்ப்பிடத்தக்கது. நடைமுறைகள் முடிந்த பின் தம்மாமில் உடல் அடக்கம் செய்யப்படும் என சமூக ஆர்வலர் நாஸ் வக்கம் தெரிவித்தார். குளிர் காலநிலையில் தீமூட்டி குளிர் காய்தல் மற்றும் மின்சார ஹீட்டர்களைப் பயன்படுத்தும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிவில் பாதுகாப்பு மீண்டும் வலியுறுத்தியது. தமாமில் உள்ள கதீஃப்பில் என்ற இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற விபத்தில் கேரளாவை சேர்ந்த இருவர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு விழிப்புணர்வுகள் செய்ததாலும் குவைத் உட்பட வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த சாதாரண தொழிலாளர்கள் குளிரில் இருந்து தப்பிக்க இதுபோன்று தீ மூட்டி மூச்சுத்திணறி உயிரிழப்பது தொடர்கதை ஆகிறது. குவைத்திலும் கடந்த சில வருடங்களில் தமிழர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இதே காரணத்திற்காக உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குவைத் தீயணைப்பு துறையையும் குளிர்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை நேற்று முன்தினம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் முக்கியமாக மூடிய காற்றே வாராத அறைகளில் நிலக்கரி மற்றும் கரிக்கட்டை பயன்படுத்தி தீப்படுக்கை தயார் செய்ய கூடாது என்று எச்சரிக்கையாக வெளியிட்டுள்ளது. அப்படி செய்தால் தூங்கும் முன்னர் அதை அணைத்து விட்டு தூங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Workers | Fire Accident | Death Dammam

Add your comments to Search results for Tamil Workers

Saturday, January 6, 2024

வளைகுடா நாடுகளில் குற்றம் செய்யாமல் இது போன்ற ப‌ல்வேறு வழக்குகளில் இந்தியர்கள் கைதாவது தொடர்கதை ஆகிறது

குவைத்தில் போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ள 4 அப்பாவி தமிழக இளைஞர்களை மீட்க குடும்பத்தினர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Image : கைது செய்யப்பட்ட 5 பேர்

வளைகுடா நாடுகளில் குற்றம் செய்யாமல் இது போன்ற ப‌ல்வேறு வழக்குகளில் இந்தியர்கள் கைதாவது தொடர்கதை ஆகிறது

இந்தியா,தமிழகம் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியை சேர்ந்த 4 இளைஞர்கள் கடந்த செப்டம்பர்-2023 யில் மீன்பிடி வேலைக்காக குவைத்திற்க்கு வந்துள்ளனர். இந்நிலையில் டிசம்பர்-5,2023 அன்று இவர்களுடன் இன்னொரு எகிப்து நாட்டை சேர்ந்த நபர் உட்பட 5 பேரையும் போதைப்பொருள் வழக்கில் குவைத் கடலோர காவல்படை கைது செய்ததாக கும்ம்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. புதிதாக வேலைக்கு சென்ற இவர்களுக்கு மொழிகூட தெரியாத நிலையில் உடன் உள்ள நபர் சொல்லி வேலைகளை செய்து வந்துள்ளனர் என்றதும், அந்த எகிப்து நபர் கடலில் மீன்பிடிக்க சென்ற போது ஈராக்,ஈரான் எல்லையில் இருந்து இதை கடத்தி வந்துள்ளதும், சிக்கிய போது இந்த அப்பாவி தமிழ் இளைஞர்களையும் மாட்டி விட்டதும் தெரிய வந்துள்ளது.

போலீஸ் விசாரணையில் அந்த நபர் இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்று காவல்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. குவைத்திலுள்ள சிலரை குடும்பத்தினர் தொடர்பு கொண்ட போது இந்த தகவல்கள் கிடைத்துள்ளது.மேலும் இவருடைய முதலாளியும்(Sponsor) தமிழக நபர்கள் அப்பாவிகள் எனவும், எகிப்து நாட்டவர் தான் ஏதோ செய்துள்ளான் எனவும், இருநாட்டு வெளியுறவுத்துறை மூலம் முயற்சி செய்து, இவர்கள் குற்றவாளி இல்லை என்பதை நிருபித்து மீட்க முயற்சி எடுக்க சொல்லியுள்ளார்.

இந்த வழக்கில் சிக்கியுள்ள தமிழர்கள் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது. வினோத், சந்துரு, ஷேசு மற்றும் கார்த்திக் என்பதாகும். இதில் ஒருவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளது. இன்னொரு நபருக்கு 3 தங்கைகள் உள்ளது. மேலும் இது தொடர்பாக குடும்பத்தினர், நாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் சென்று குடும்பத்தை கரையேற்றுவார்கள் என்று கடன்பட்டு அனுப்பிய நிலையில் இவர்கள் கண்டிப்பாக இப்படி ஒரு தவறையும் செய்ய மாட்டர்கள் எனவும், எப்படியாவது இவைகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் குவைத் இந்திய தூதரகம் முயற்சி எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குடும்பத்தினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு மனு மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சாதாரண ஒரு பிரச்சனை என்றால் சமூக ஆர்வலர்கள், அந்தந்த நாட்டு தூதரகங்கள் மூலம் எப்படியாவது மீட்க முடியும், போதை பொருள் கடத்தல் போன்ற பயங்கரமான குற்றங்களுக்கு மரணதண்டனை வரையில் வழங்கபடும். எனவே இரு நாட்டு உயர்மட்ட வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுத்து விசாரனை நடத்தி குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க முடிந்தால் மட்டுமே இதற்கான தீர்வு கிடைக்கும். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு செல்லும் வரை ஒவ்வொரு வளைகுடா இந்தியர்களும் இதை பகிர்வு செய்து உதவுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Workers | Arrested Kuwait | Drug Case

Add your comments to Search results for Tamil Workers

Wednesday, August 21, 2019

குவைத்தில் கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக வேலைக்கு 36,4500 பேர் வந்துள்ளனர்; இதில் முதலிடத்தில் இந்தியர்கள் 17,5000 தொழிலாளர்கள் :

குவைத்தில் கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக வேலைக்கு 36,4500 பேர் வந்துள்ளனர்; இதில் முதலிடத்தில் இந்தியர்கள் 17,5000 தொழிலாளர்கள் :

குவைத் தொழிலாளர்கள் துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த  3 லட்சத்தி 64 ஆயிரத்தி 500 வெளிநாட்டினர் புதிதாக வேலைக்காக தொழில்விசா பெற்று வந்துள்ளனர் என்று  அல்-கபாஸ் தினசரி நாளிதழில்  தெரிவித்துள்ளது. இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் கட்டுமானத் தொழிலுக்கும்(Construction Workers), பாதுகாப்புக் காவலர்கள்(Security Guards), கனரக உபகரணங்களை இயக்குபவர்கள்(Operators Of Heavy Equipment) மற்றும் லாரி ஓட்டுனர்கள்(Truck Drivers) ஆகிய வேலைக்கு அதிகமானவர்கள் வந்துள்ளனர்.

குவைத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக வேலைக்கு வந்த வெளிநாட்டு ஊழியர்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பது இந்தியர்கள் 1 லட்சத்தி 75,000 ஆயிரம் பேர், அடுத்த படியாக எகிப்தியர்கள் 80,000 பேர். இதன் பொருள் இந்தியர்களின் விகிதம் எகிப்தியர்களை விட 120 சதவீதம் அதிகமாகும். மறுபுறம், இந்த காலகட்டத்தில் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை 12,000 குறைந்து மொத்தம் 80,000-ஐ எட்டியுள்ளது, இதுபோல் இலங்கையர்கள் 8,500 பேரும், ஈரானியர்கள் கிட்டத்தட்ட 4,321 பேர் குறைந்தது 22,600-ஐ எட்டியுள்ளது.

மேலும் இது தொடர்பாக பொருளாதார விவகார அமைச்சர் மரியம்-அல்-அகீல் அவர்கள் அல்-கபாஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வைக் கையாளுவதற்கு, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் ஒரு வரைவு தயார் செய்து வருகிறது என்றும், தொழிலாளர்கள் தேவை அறிந்து திறமையான தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துவர குறைந்தபட்ச தகுதிகளை நிர்ணயிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்.

Reporting by : Kuwait tamil pasanga Team

Add your comments to Search results for Tamil Workers

Thursday, June 27, 2019

குவைத்தில் நீங்கள் தொழில்மாற்றம் பெற வேண்டுமா.......???? தகுதி தேர்வு எழுத வேண்டும் என்ற புதிய நிபந்தனை அறிவிப்பு:

குவைத்தில் நீங்கள் தொழில்மாற்றம் பெற வேண்டுமா.......???? தகுதி தேர்வு எழுத வேண்டும் என்ற புதிய நிபந்தனை அறிவிப்பு:

குவைத்தில் அடுத்த வருடம் 2020 முதல் வெளிநாட்டு தொழிலாளர்கள்(நாம்) வேலை மாற்றம்(தொழில் மாற்றம்) பெறுவதற்கு தகுதி தேர்வு எழுத வேண்டும் என்ற புதிய சட்டம் நடைமுறையில் வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் முதல்கட்டமாக 20 வகையான துறைகளில் வேலை மாற்றம் பெறுவதற்கு இந்த தகுதி தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்று பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் மரியம்-அல்-அகீல் குவைத் பிரபல பத்திரிக்கை Al-Qabas அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதை மேற்கொள் காட்டி குவைத்தில் உள்ள மற்ற பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டுள்ளது.

மனிதகடத்தல்(சட்டத்திற்கு புறம்பாக தொழிலாளர்களை அழைத்து வருவது) மற்றும் விசா வியாபாரம் ஆகியவற்றை தடுக்க வேண்டியே இந்த புதிய விதிமுறை நடைமுறையில் கொண்டுவருவதற்கு Public Authority for Manpower (PAM) (பொது மனிதவள ஆணையம்) முடிவு செய்துள்ளது. தற்போது தகுதியில்லாத பலருக்கு பல்வேறு துறைகளில் வேலை பெறுவதற்கு 1500 குவைத் தினார் வரையில் பெற்றுக்கொண்டு விசாவை வியாபாரமாக இடை தரகர்கள் மற்றும் போலியான ஏஜென்சிகள் அப்பாவிகளை ஏமாற்றி விற்பனை செய்கிறார்கள் என்றும் இதை முற்றிலும் இதன் மூலம் தவிர்க்க முடியும் என்றும்,தகுதியான நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதல்கட்டமாக வேலை மாற்றம் பெறுவதற்கு தகுதி தேர்வு எழுதவேண்டிய 20 பிரிவுகள் விபரங்கள் பின்வருமாறு:

1)Car mechanics

2)EAlectricians

3) Security supervisors

4) Safety supervisors

5) Sanitary workers

6) Technical surveyors

7) Aluminum technicians

8) Welders

9) Lathe technicians

10) Advertising agents

11) Sales representatives

12) Irrigation technicians

13) Steel fixers

14) Carpenters

15) Construction carpenters

16) Asphalt laboratory technician

17) Purchasing officers

18) Accountants

19) Librarians

20) Legal counsels மற்றும்

21) Legal clerks  ஆகியவை இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் குவைத்தில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளி பல்கலைக்கழகம் வழங்கியுள்ள சான்றிதழ்கள் அடிப்படையில்
தன்னுடைய கல்வி தகுதி தொடர்பான மாற்றங்கள் வேலைக்காக மாற்ற வேண்டும் என்றால் தற்போது செய்யும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தாயகம் சென்றுவிட்டு,கல்வித் தகுதியின் அடிப்படையில் புதிய விசாவில் குவைத்திற்கு மீண்டும் வேலைக்கு தாராளமாக வரலாம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்


Reporting by Kuwait tamil pasanga team

Add your comments to Search results for Tamil Workers

Wednesday, July 3, 2019

குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் முதலாளிகளை கறுப்புப்பட்டியலில் சேர்க்க நடவடிக்கை:

குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் முதலாளிகளை கறுப்புப்பட்டியலில் சேர்க்க நடவடிக்கை:

குவைத்தில் தனியார் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து புகார் வந்தால் அந்த நிறுவனங்களை கறுப்புப்பட்டியலில் சேர்த்து அந்த நிறுவனங்கள் தொடர்ந்து இயக்க முடியாதபடி குவைத் தொழிற்துறை அமைச்சகம் கறுப்புப்பட்டியலில் சேர்க்கும்.இப்படி நூற்றுக்கணக்கான கம்பெனிகளின் ஆவணங்கள் அரசு ரத்து செய்துள்ளது.

இதுபோல் குவைத்தில் வேலை செய்யும் வீட்டுத் தொழிலாளர்களின்(Domestic workers) உரிமைகளை பறிக்கும் முதலாளிகளை(Sponsor) கருப்புப் பட்டியல் சேர்க்க குவைத் தொழிலாளர் துறை அமைச்சகம் நடவடிக்கைகள் துவங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.வீட்டுத் தொழிலாளர்களிடம் இருந்து தொடர்பு புகார்கள் வருவதால் இந்த புதிய நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாக தெரிகிறது.குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தொழிலாளர் துறை அமைச்சக இயக்குநர் ஜெனரல் அஹ்மத்-அல்-முசா இதை தெரிவித்துள்ளார்.

வீட்டுத் தொழிலாளர்களிடம் இருந்து சம்பளம் வழங்காத புகார்கள், துன்புறுத்தல் புகார்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட புகார்கள் தினசரி அதிகரிக்கும் நிலையில் இதை அமல்படுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.ஒரே முதலாளிகளின்(Sponsor) பெயரில் 7ழும் 8ட்டும் முறை தொடர்ந்து புகார்கள் வரும் நிலை ஏற்படுகிறது.இப்படிபட்ட முதலாளிகள் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வரவது முறையல்ல என்பதால் கறுப்புப்பட்டியலில் சேர்க்கும் புதிய நடவடிக்கைக்கு ஆலோசனை செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி தொடர்ந்து புகார் வரும் முதலாளிகளையும்( Sponsor) மற்றும் தொழிலாளர்களை அழைத்து வரும்  ஏஜென்சிகளையும்(Recruitment Agency)
கருப்புப் பட்டியல் சேர்க்க தொழிலாளர்கள் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் பேட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளார்.


Reporting by Kuwait tamil pasanga team.








Add your comments to Search results for Tamil Workers