BREAKING NEWS
latest

Kuwait News - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Kuwait News செய்திகள், கட்டுரைகள், Kuwait News புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Monday, November 28, 2022

குவைத்தில் காணவில்லை என்று தேடப்பட்ட இந்திய பெண்குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டார்:

குவைத்தில் தேடப்பட்ட பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது

Image : மீட்கப்பட்ட அபியா

குவைத்தில் காணவில்லை என்று தேடப்பட்ட இந்திய பெண்குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டார்

குவைத்தின் அப்பாசியாவில் இருந்து நேற்று(27/11/2022) மாலை 6:30 முதல் காணவில்லை என்று தேடப்பட்ட அபியா என்ற இந்திய பெண் குழந்தை நள்ளிரவில் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தையை கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் பெற்றோர்கள் நன்றி தெரிவி்த்துள்ளனர்.நேற்று(27/11/2022) ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இந்தி குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிக பகிரப்பட்ட நிலையில் இந்த புதிய செய்தி வெளியாகியுள்ளது.

Missing Child | Indian Girl | Kuwait Police | Kuwait News

Add your comments to Search results for Kuwait News

Wednesday, May 29, 2019

குவைத்தில் வேலைக்கு வரும் இந்திய தொழிலாளர்கள் தவிர்க்க வேண்டிய கம்பெனிகள் மற்றும் இந்திய ஏஜென்சிகள் பட்டியல் விபரங்கள்:

குவைத்தில் வேலைக்கு வரும் இந்திய தொழிலாளர்கள் தவிர்க்க வேண்டிய கம்பெனிகள் மற்றும் இந்திய ஏஜென்சிகள் பட்டியல் விபரங்கள்:




குவைத்தில் இந்திய தூதரகம் தங்கள் அதிகாரபூர்வ இந்திய அரசின் வலைத்தள பக்கத்தில் ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது
 இந்த தகவல் தற்போது குவைத்தில் உள்ள பல செய்தி தளங்கள் செய்தியாக பதிவு செய்துள்ளது.
              குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பல இந்திய தொழிலாளர்கள் போலியான ஏஜென்சிகள் இடைத்தரகர்கள் மற்றும் இல்லாத வளைகுடா நாடுகளில் இல்லாத மற்றும் மூடப்பட்ட உள்ள பல்வேறு நிறுவனங்கள் பெயரில் மேலும் பல்வேறு வழிகளில் போலியான வேலை வாய்ப்புகள் சம்மந்தமான அழைத்து வந்து ஏமாற்றப்படுவதுடன், பல்வேறு சித்திரவதை மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் செய்திகள் அன்றாடம் பார்க்கிறோம்.
           இந்நிலையில் குவைத்தில் சமீபகாலத்தில் 200 ற்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் இவ்வாறான அழைத்து வரப்பட்டு, சில தினங்களுக்கு முன்பு 72 இந்திய தொழிலாளர்கள் தவித்து வருவது வரையில் பல பிரச்சனைகள் இந்திய தூதரகம் மற்றும் குவைத் தொழிலாளர் துறை அமைச்சகத்தின் மேற்பார்வை உள்ள மற்றும் தீர்வு காணவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
            இதுபோல் தனிநபர் பலர் வீட்டுத் தொழிலாகவும் வந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.
இதையடுத்து குவைத்தில் வேலைக்கு வரும் இந்திய தொழிலாளர்கள் முக்கியமாக தவிர்க்க வேண்டிய குவைத்தில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் பல்வேறு துறை சார்ந்த வேலைகள் வழங்கும் ஏஜென்சிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
            இதுபோல் இந்தியாவில் உள்ள பல ஏஜென்சிகள் நிறுவனங்கள் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்த ஒரு ஏஜென்சி நிறுவனமும் இடம்பெற்றுள்ளது.
   அதன் முழு விபர பட்டியல்:

List Listndian EmbassyC Companiesto Avoid:

குவைத்தில் தவிர்க்க வேண்டிய பட்டியல்
  1. Al Blassem General Trading & Contracting Company
  2. Ashi General Trading & Contracting Company
  3. Gersen General Trading & Contracting Company
  4. Al Welaya Travel & Tourism
  5. Al Ateeqi Company
  6. Al-Amer Electrical Company Limited
  7. Saad Mashood
  8. Al Saqlawi International Company
  9. London Group of Medical Services
  10. Azad Arabian General Trading & Contracting Company
  11. Saad Mutlak Dakhnan for Home Care Services Company
  12. National Contracting Company
  13. Kuwait Industrial Refinery Maintenance and Engineering Company (Kremenco)
  14. Al-Hazem Car Est.
  15. Talal S.f. Al-Ali Clinic
  16. Al-Sabah Furniture
  17. Wataniya Opticals Company
  18. First Land Trading & Contracting Company
  19. Baith Al Akhwat General Trading
  20. World of Design Company
  21. International City Corp Company For General Trading & Contracting
  22. Martyar Al Asrar Al Qabandi Bilingual School
  23. Elite Universal Group General Trading & Contracting Company
  24. Al Musthashar United General Trading & Contracting Company
  25. Badar Naser Haji Shhran Al Tandamak
  26. Gents Master Hand Tailors
  27. Al Abraq Trading Company
  28. Al-Abraj Cleaning & Contracting Company & Its Owner Shri Shaker M. Hassan
  29. Al-Khandak Security Company
  30. General Trading Company (GTC)
  31. Kuwait Al-Soqoor Security & Protection
  32. Arab Centre for Commercial & Real Estate Company
  33. Ahmad Ghuloum Redha Ashkanani Co. for Gen. Trading & Contracting W.l.l.
  34. TGM Engineering Co.
  35. Al Mishal Centre for Cloaks
  36. Jowhara Dorain General Trading and Contracting Co.
  37. Gulf Car Rental Company
  38. Al Masa Center Laundary Co.
  39. Safeer Al Nida Co.
  40. Wael Al Nusif Trading Co.
  41. Basco International Co. General and Contracting
  42. First Kuwaiti General Trading Co.
  43. Sabah International Group General Trading And Contracting
  44. Oxygen Hard Line Co.
  45. Al Taan General Trading & Contracting Company & Its Associate Man Tech Services
  46. Sahraâs Al-Roala General Trading & Contracting Company
  47. Al-Abraj Cleaning Building & Cities Contracting Company
  48. Al Mudeer Transport Company
  49. Aqueela Foodstuff Company
  50. Al Layali Cargo Transport Co.
  51. Bronzia Projects General Trading and Contracting Co.
  52. Al Kahla Goods Transport Est.
  53. Mashal Lilubi Wal Bashoot
  54. Kharafi National KSC
  55. Kharafi National KSC (Closed )
  56. General Trading
  57. Bayan National Construction and Contracting Company
  58. Al Bahar Medical Services Co.
  59. Tareq Co. W.l.l
  60. SKS Group Gen. Trad. And Contracting Co. W.l.l
  61. Al Manar Factory for Production and Packaging of Black and White Cement
  62. Sabic Global Factory Aluminium Fabrication
  63. Al Thaqeb Trading Co./al Thaqib Chocolate Co.
  64. Al Mishal Co./Abaya & Bishoot Workshop Center
  65. Bin Hamza General Trading & Contracting Co./Al-Sabaeal Al-Alamia for the Repair Of Jewellery & Silver
  66. Fahad Al Salem Sons @ Partners General Trading & Cont. Co.
  67. UNI Sign Advertising Co.
  68. Al Futooh International Gen. Trad. & Cont. Group
  69. Ghazwan Trading & Contracting Company
  70. First Projects General Trading & Contracting Company
  71. Care Services ( Al Raaya Company For Builders & Cities Cleaning Contracting)
  72. Al-Ruwad United General Trading & Contracting Company
  73. Al Reaya Company for Building & Cities Cleaning Contracting
  74. Al Essa Medical & Scientific Equipment Co.
  75. Naser Golden General Trading And Contracting Group
  76. National Ready Mix Concrete Company
  77. Al-Raqeeb General Building Contracting Co.wll
  78. Rawnaq United General Trading & Contracting Co. / Taiyaba Kitchens From Steel Fabrication
  79. Hameed Mazyad Ali Aladwani
  80. Nest Logistics Services Company W.l.l
  81. Enasco General Trading and Contracting Company W.l.l.
  82. Crystal House General Trading Co
  83. Advanced Technology Company(Atc)
  84. Swiss Medical Services
  85. Abdulla Yousef Al Radwan Gen. Trad. & Cont. Co. W.l.l.
  86. Speed United Gen. Trad. & Cont. Co.
  87. Hytham Restaurant
  88. Al Alamiyah For Manufacturing Tempered Glass Co.w.l.l
  89. Lobster Lake Restaurant
  90. Sakeena Book Stall/Sakina International General Trading Co.
  91. Quds Al Ahliya Co. General Trading
  92. Al Ahlia General Trading and Contracting Co.

List of Indian Embassy  RecruitingAgencies to Avoid:

தவிர்க்க வேண்டிய இந்திய ஏஜென்சிகள்
1 M/s. IQ Educational Academy, Chennai
2 M/s. S.G. Travel Agency Pvt. Ltd, Mumbai.
3 M/s. Kapoor K.L. Enterprises-Manpower Consultant
4 M/s. S.F. international Pvt.Ltd, Delhi
5 M/s.N.D. Enterprises, New Delhi
6 M/s. Aaina Travels Enterprises, Mumbai
7 M/s. Sara Overseas Pvt. Ltd, New Delhi
8 M/s. U. S. International, New Delhi.
9 M/s. Saba International Tour & Travel, Delhi.
10 V. MEX Consultant Services, New Delhi.
11 M/s. Star Enterprises, Patna.
12 M/s. SMP Service, UP.
13 M/s. Amazing Enterprise, Mumbai.
14 M/s. Java International, New Delhi.
15 M/s. Star International, New Delhi
16 M/s. Settle International, Zirakpur
17 M/s. Global Services, Mumbai
18 M/s. International HR Consultant
குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்
News Source:Kuwait Indian Embassy website

Report by Kuwait tamil pasanga team

Add your comments to Search results for Kuwait News

Wednesday, December 7, 2022

குவைத் எகிப்து நாட்டினருக்கான வேலை விசாவை நிறுத்தி வைத்துள்ளது:

எகிப்தில் இருந்து குவைத்திற்கு வருகின்ற தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் தொடர்பாக எகிப்து அரசு எடுத்துள்ள நடவடிக்கையின் எதிரொலி

Image: Kuwait Airport

குவைத் எகிப்து நாட்டினருக்கான வேலை விசாவை நிறுத்தி வைத்துள்ளது:

குவைத் எகிப்து தொழிலாளர்களுக்கான வேலை விசாவை நிறுத்தி வைத்துள்ளது. உள்துறை அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி உள்ளூர் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சர் ஷேக் தலால் அல் காலித் அல் சபாவின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பரில் இருந்து அமல்படுத்தப்பட்ட இந்த உத்தரவு தொடரும் என்றும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக புதிய முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் எகிப்தில் இருந்து வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை எகிப்திய தூதரகம் நிர்ணயித்துள்ளது. இந்த நிபந்தனைகள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, எகிப்தியர்களுக்கான பணி அனுமதி வழங்குவதை நிறுத்துமாறு முதல் துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அவர்கள் உத்தரவிட்டதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. எகிப்து தூதரகம் விதித்துள்ள நிபந்தனைகள் குவைத் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிர்வாக விதிமுறைகளுக்கு முரணானது எனவும் தெரிகிறது.

இதன் காரணமாகவே குவைத் கடுமையான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிகிறது. அதேபோல் எகிப்தில் இருந்து குடும்ப விசாவில் குவைத் வருபவர்களுக்கான ஸ்டாம்பிங் கட்டணத்தை எகிப்தில் உள்ள குவைத் தூதரகம் கடந்த தினத்தில் ஒரேயடியாக மூன்று மடங்கு உயர்த்தியது. இதேபோல் இரு நாடுகளிலும் Online வழியான பணியாளர்கள் தேர்வு அமைப்பு நடைமுறை ரத்து செய்யப்பட்டன. குவைத்தில் இந்தியர்களுக்கு அடுத்தபடியாக எகிப்தியர்கள் இரண்டாவது பெரிய வெளிநாட்டு சமூகமாக நாட்டில் வேலை செய்து வருகின்றனர்.

Kuwait Banned | News Visa | Kuwait Visa

Add your comments to Search results for Kuwait News

Sunday, January 17, 2021

குவைத்தில் தமிழக இளைஞர் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

மரணமடைந்த ஜார்ஜ்[வயது-30]

குவைத்தில் இந்திய, தமிழகம்,வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் பெயர் ஜார்ஜ் எனவும்,வயது-30 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளாக குவைத்தில் உள்ள Chest Diseases மருத்துவமனையில்,எக்ஸ்ரே தொழில்நுட்பம் ஊழியராக சேவை செய்து வந்தார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் கடந்த ஜனவரி-15 அன்று திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் ஜார்ஜ் மரணமடைந்தார் என்றும், பெற்றோர் தாயகத்தில் வசித்து வருகின்றனர், ஜார்ஜ்க்கு இன்னும் திருமண ஆகவில்லை. இவருடைய உடலை தாயகம் அனுப்புவதற்கான சட்ட நடவடிக்கைகளை குவைத்தில் உள்ள நண்பர்கள் சேர்ந்து முடித்தநிலையில், இன்று(17/01/21) ஞாயற்றுக்கிழமை மாலையில் குவைத் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் உடல் சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கிருந்து ஜார்ஜ் அவர்கள் உடல் அவருடைய சொந்த ஊரான வேலூர் எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுவதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

வளைகுடா பொறுத்தவரையில் வெளிநாடுகளில் இருந்து புதிதாக வேலைக்காக வரும் நம்மைப்போன்ற எந்தவொரு நபருக்கு இங்குள்ள காலநிலை ஒத்து போவதில்லை. எனவே நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம்தான் செய்ய வேண்டும். ஏ.சி-யில் அதிக நேரம் இருப்பதை முதலில் தவிர்க்க கற்றுக் கொள்ளுங்கள் அதுவே நம்முடைய முதல் எதிரி. வெப்பமான காலநிலையில் நம்முடைய உடலை வைத்திருப்பதே, நமது உடல் ஆரோக்கியமாக இருக்க முக்கியமான வழிகளில் ஒன்று. பிறகுதான் உணவு கட்டுப்பாடுகள்.... உடற்பயிற்சி எல்லாம்.....


Indian Death | Heartattack Death | Kuwait News

Add your comments to Search results for Kuwait News

Thursday, February 15, 2024

குவைத்தில் உழவு இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

குவைத்தில் பாதுகாப்பை உறுதி செய்யாமல் வேலை செய்வாதல் விபத்துகளில் வெளிநாட்டு தொழிலாளர்கள பரிதாபமாக உயிரிழப்பது தொடர்கதை ஆகிறது

Image : மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்

குவைத்தில் உழவு இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

குவைத்தின் வேலைக்காக வந்த 34-வயது இளைஞர் Barr Al-Salmi பகுதியில் வேலை செய்து வந்த நிலையில் நேற்று(14/02/24) புதன்கிழமை பிற்பகல் உழவு இயந்திரத்தில் சிக்கியதாக தகவல் கிடைத்து Al-Shaqaya மையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

உடனடியாக அவரை அந்த இயந்திரத்தில் இருந்து மீட்டு எடுத்த போதும் துரதிர்ஷ்டவசமாக உழவு இயந்திரத்தில் சிக்கியதில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக பரிதாபமாக பலியானார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேலாதிக்க விசாரணை மற்றும் கூடுதல் நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழக்கு மாற்றப்பட்டது. உயிரிழந்தவர் நேபாள நாட்டை சேர்ந்தவர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

எனவே தயவு செய்து உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து வேலைகளை செய்யுங்கள். நேற்று முந்தினம் 20-வயது தமிழக இளைஞர் பத்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த செய்திக்கு இடையில், இந்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது.அதற்கும் இரு தினங்களுக்கு முன்பு வெவ்வேறான இரண்டு விபத்துகளில் 2 எகிப்து தொழிலாளர்கள் ஒரே நாளில் உயிரிழந்தது குறிப்படத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Nepalil Worker | Kuwait News | Gulf Worker

Add your comments to Search results for Kuwait News

Friday, January 1, 2021

குவைத்தில் நேற்றைய ஹோட்டல்களில் புத்தாண்டு இசை நிகழ்ச்சி நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை


(Photo: Kuwait News Agency)

குவைத் உள்துறை அமைச்சகத்தின் 
புதிதாக  பொறுப்பேற்றுள்ள அன்வர் முராத் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனுமதி இல்லாமல் ஹோட்டல்களின் புத்தாண்டு இசை நிகழ்ச்சியை நடத்தியது தொடர்பான   சட்ட மீறல்களை அமைச்சகம் கண்டறிந்தது உ‌ள்ளதாகவும். 

இடையூறு மற்றும் பொது ஒழுக்கங்களை மீறியதற்காக குவைத் சட்டம் 32/2016 இன் 12-வது பிரிவின்படி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மற்றும் அதற்கு பொறுப்பானவர்கள் வழக்கு விசாரணைக்கு உட்பட வேண்டியது இருக்கும்.

குவைத்தில் நேற்று சில ஹோட்டல்களில் புத்தாண்டு இசை நிகழ்ச்சிகள் நடந்தது தொடர்பான வீடியோக்கள் பல, சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Add your comments to Search results for Kuwait News

Sunday, February 4, 2024

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் குவைத்தில் மரணமடைந்தார்

குவைத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் மாரடைப்பால் மரணமடைந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த மாரியப்பன்

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் குவைத்தில் மரணமடைந்தார்

குவைத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த இந்தியா, தமிழகம், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாகதேவியை அடுத்த சுண்ணாம்புக்கல் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது-50). இவருடைய தந்தை பெயர் முத்தையா, இவர் குவைத்தின் எகேலா பகுதியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம்(02/02/2024) வெள்ளிக்கிழமை அன்று திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார்.

இந்த தகவலறிந்த மக்கள் சேவை மைய அமைப்பு துரிதமாக செயல்பட்டு சட்ட நடவடிக்கைகளை முடித்தது. இதையடுத்து அன்னாரின் பூத உடல் இன்று(04/02/2024) இரவு எமிரேட்ஸ் விமானம் மூலம் தாயகம் அனுப்பி வைக்கப்படுகிறது. அன்னாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவோர் இன்று மதியம் சரியாக 1 மணிக்கு குவைத்தின் சபா மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றும் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Worker | Kuwait News | Indian Worker

Add your comments to Search results for Kuwait News

Monday, January 22, 2024

குவைத்தில் மண்சரிவு தமிழர் மரணம் துயரமான செய்தி வெளியாகியுள்ளது

ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த சாமுவேல்

குவைத்தில் மண்சரிவு தமிழர் மரணம் துயரமான செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தின் Al-Zour சாலை‌யி‌ல் கட்டுமானத்தில் உள்ள ஒரு இடத்தில் இன்று(21/01/24) ஞாயிற்றுக்கிழமை மணல் சரிந்து இருவர் மண்ணில் புதைத்தனர். தகவல் கிடைத்து விரைந்து வந்த தேடல் மற்றும் மீட்பு மையங்களின் தீயணைப்புபடை வீரர்கள் துரிதமாக செயல்பட்டுஇடிபாடுகளுக்கு அடியில் இருந்து இரண்டு தொழிலாளர்களையும் வெளியே எடுத்தனர் .

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக செய்தி வெளியான நிலையில் இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற புதிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இதில் உயிரிழந்த இந்தியர் பெயர் சாமுவேல்(வயது-41) எனவும், தமிழகம், அறந்தாங்கி எனவும், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மற்றவர் பெயர் திருஞானம் எனவும், அவரும் அதே ஊரைச் சேர்ந்தவர் தான் எ‌ன்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Worker | Kuwait News | Indian Worker

Add your comments to Search results for Kuwait News

Friday, November 22, 2019

குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களை (Domestic Works) பாதுகாக்கும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது:

குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களை (Domestic Works) பாதுகாக்கும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது:


குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களை(Domestic Works) பாதுகாக்கும் புதிய உத்தரவு வெளியாகியுள்ளது. இதன்படி வெளிநாடுகளில் இருந்து வீட்டுத் தொழிலாளியை அழைத்துவரும் முதலாளி(Sponsor) தன்னுடைய Sponsorship மற்றும்  நபருக்கு மாற்றும்போது இனிமுதல் சம்மந்தப்பட்ட தொழிலாளியின் முன்னிலையில் மட்டுமே அவர்கள் அனுமதியுடன் அதற்கான ஆவணங்களை புதிய நபரின் பெயருக்கு மாற்ற முடியும் என்று அறிக்கையை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிலாளர்கள் துறை பிரவு குவைத்தில் உள்ள அனைத்து தொழிற்துறை அமைச்சக அலுவலகங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் சம்மந்தப்பட்ட தொழிலாளியின் முன்னிலையில் அல்லாமல்  மற்றொரு Sponsor(முதலாளி)-யின் பெயருக்கு விசா மாற்றம் செய்ய அனுமதி வழங்கப்படமாட்டாது என்று அறிக்கையில் தெளிவுபடுத்தபட்டுள்ளது. இதன்மூலம் சம்மந்தப்பட்ட தொழிலாளியின் முன்னிலையில் மட்டுமே இனிமுதல் விசா மாற்றம் செய்ய முடியும் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகின்றது.

இதன்மூலம் மனித கடத்தல், சட்டத்திற்கு புறம்பாக வீட்டுத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக  விற்பனை செய்வது உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பாக நடவடிக்கைகளை முற்றிலுமாக தடுக்க முடியும் என்றும், தொழிலாளர் துறை அமைச்சக அதிகாரி பிரிகேடியர் டைரக்டர் ஜெனரல்  அப்துல்-காதர்-அல்ஷா அவர்கள் தெரிவித்துள்ளார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு Bcc News சமூக வலைதளங்களை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களுக்கு தெரியாமல் அனுமதி இன்றி தொழிலாளர்கள் விற்பனை செய்வது தொடர்பாக  ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்.

Reporting by Kuwait tamil pasanga Team








Add your comments to Search results for Kuwait News

Monday, August 5, 2019

துபாய் ஆட்சியாளர் ஹஜ் பெருநாள் முன்னிட்டு 430 தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குகிறார்:


துபாய் ஆட்சியாளர் ஹஜ் பெருநாள்  முன்னிட்டு 430 தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குகிறார்:

துபாய் ஆட்சியாளரும்,அமீரகத்தின் துணை தலைவரும் பிரதமருமான Sheikh Mohammed Bin Rashid Al Maktoum அவர்கள் துபாய் சிறையில்  உள்ள 430 தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழக்கி விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

துபாயின் அட்டர்னி ஜெனரல் Essam Eisa Al Humaidan கூறுகையில் கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் ஒரு புதிய வாழ்க்கை தூங்குவதற்கும், சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைந்து வாழ்வதற்கு இந்த வாய்ப்பை மன்னர் வழங்கியுள்ளார் என்று அவர் கூறினார்.இந்த உத்தரவை செயல்படுத்த நடவடிக்கைகள் துவங்கியுள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இதுபோல் நேற்றைய தினம் அமீரகத்தில் பல்வேறு சிறைச்சாலைகளில் இருக்கும் 669 கைதிகளுக்கு கருணை அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அமீரக ஜனாதிபதி Sheikh Khalifa Bin Zayed Al Nahyan அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Reporting by Kuwait tamil pasanga Team.

Note : News Don't copy without page team  permission

Add your comments to Search results for Kuwait News

Thursday, August 29, 2019

குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை இனிமுதல் புதிதாக குடும்ப(FamilyVisa) விசாவில் அழைத்துவர முடியாது:


குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை இனிமுதல் புதிதாக குடும்ப(FamilyVisa) விசாவில் அழைத்துவர முடியாது:

குவைத்தில் உள்ள வெளிநாட்டவர் 500 தினாருக்கு மேல் மாதசம்பளம் இருந்தால் மட்டுமே, புதிதாக அவர்களே Sponsorship-ஆக (சொந்த ஸ்பான்சர்ஷிப்பில்) தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை உடன் தங்க வைக்க முடியும். கடந்த வாரம் வரையில் இந்த சம்பள வரம்பு 450 தினார் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் குவைத்தில் தற்போது குடும்பத்துடன் 450 தினாரில் விசா பெற்ற வசித்து வரும் நபர்கள் விசா புதுப்பித்தல் செய்ய முடியும்.

ஆனால் மேல்குறிப்பிட்ட இரண்டு தரப்பினரும் ஆம்பு வைக்கும் புதிய செய்தி வெளியாகியுள்ளது. அதாவது 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை இனிமுதல் புதிதாக குடும்ப விசாவில் உள்ளவர்கள் தாயகத்தில் இருந்து அழைத்துவர முடியாது என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட குவைத்தில் குடும்ப விசாவில் உள்ள வெளிநாட்டினர் சிறுவர்களுக்கான விசா புதுப்பித்தலையும் அதிகாரிகள் தடை செய்துள்ளனர். குவைத் உள்துறை அமைச்சகத்தின் புதிய முடிவின் அடிப்படையில் இந்த புதிய விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே புதிய உத்தரவுபடி, 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு குடும்ப(FamilyVisa) விசாவில் குவைத்தில் வர விசா கிடைக்காது.

மேலும் குவைத்தில் குடும்ப விசா தங்கியுள்ள
18 வயது நிரம்பிய ஆண் குழந்தைகளுக்கும் விசா புதுப்பித்தல் மறுக்கப்படும். ஆனால்  உள்ளூர்(குவைத்தில்) உள்ள பல்கலைக்கழகங்கள் எதாவது ஒன்றில் அவர்கள் ஒரு மாணவர் என்பதை நிரூபிக்கும் ஆவணத்தை சமர்பித்தால் இகாமா(விசா) புதுப்பித்து வழங்கபடும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர சம்பள வரம்பு 450 தினாரில் இருந்து 500 தினராக உயர்துவதற்கு முன்பு குடும்ப விசா பெற்று குவைத்தில் தங்கி வருகிற குடும்ப தலைவரின்  வேலை(Profession) ஆகியவை ஆய்வு செய்த பிறகு மட்டுமே விசா புதுப்பித்தல் செய்து வழங்கபடும் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

மேலும் சிரியா உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் குடும்ப உறுப்பினர்களை குடும்ப (Family Viesa) விசாக்களில் அழைத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக செய்தியை குவைத் அரபு செய்தி தளங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளது.

குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்.

மொழி பெயர்ப்பு  Reporting by: Kuwait tamil pasanga Team 

Note: News Don't copy without page Team permission  Only  Share & Support

Add your comments to Search results for Kuwait News

Tuesday, July 23, 2019

அமீரகத்தில் வேலைக்கு செல்லும் நபரா நீங்கள்....????உங்களுக்கு இனிமேல் போலியான விசா கொடுத்து யாரும் ஏமாற்ற முடியாது:


அமீரகத்தில் வேலைக்கு செல்லும் நபரா நீங்கள்....????உங்களுக்கு இனிமேல் போலியான விசா கொடுத்து யாரும் ஏமாற்ற முடியாது:

அமீரகத்தில் துபாய்,ஷார்ஜா உள்ளிட்ட பல பகுதிகளில் வேலைக்கு அழைத்து வரும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுற்றுலா விசா மற்றும் போலியான விசாக்களை போலியான ஏஜென்சிகள் மற்றும் இடைத்தரகர்களை கொடுத்து தொடர்ந்து ஏமாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இதில் கடந்த இரண்டு மாதங்களில் சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்சப் உள்ளிட்டவை வழியாக அதிக அளவில் ஆசை வார்த்தைகள் மற்றும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலமும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ஏமாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் கேரளா,தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல சகோதரர்கள் ஏமாற்றப்பட்டு பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு மீட்கப்பட்ட நிலையில் தங்கள் நாடுகளுக்கு வேலை வரும் வெளிநாட்டு தொழிலாளர்களை யாரும் போலியான விசாக்களை கொடுத்து ஏமாற்றமல் இருக்க யாருடைய உதவியும் இன்றி உங்களுக்கு வழங்கப்படும் விசாவில் உண்மை நிலையை நீங்களே நேரடியாக சோதனை செய்யவும் வகையில் அமீரக அரசு புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளது.

விசாவின் உண்மை நிலையை வெளிநாட்டினர் அமீரக அரசு அறிமுகம் செய்துள்ள இணையதளம் மூலமும் மற்றும் கைபேசி பதிவிறக்கம் செய்யும் Application-ஐ பயன்படுத்தியும் எளிதாக அறிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்காக இணைய தளத்தின் Link பின்வருமாறு:

www.amer.ae


இந்த Link-ஐ Click செய்து இணையதளத்தில் முதலில் Open செய்ய வேண்டும்.பின்னர் Visa enquiry என்ற பகுதியை Click செய்ய வேண்டும்,அந்த பக்கம் Open செய்ய வேண்டும் பின்னர்:

1) உங்களுக்கு அமீரகம் செல்வதற்கு அனுமதி வழங்கிய ஏஜென்சி வழங்கிய விசாவில் உள்ள விசா எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

2) பாஸ்போர்ட்டில் உள்ள பெயர்

3) உங்கள் பாஸ்போர்ட் உள்ள பிறந்த தேதி

4) உங்கள் தாய்நாடு(இந்தியா என்றால் இந்தியா இலங்கை என்றால் இலங்கை) ஆகியவை பதிவு செய்து Submit பட்டனை அழுத்த வேண்டும்.

அடுத்த நோடியில் உங்கள் விசா போலியான அல்லது உண்மையான விசாவா என்பதை அறிய முடியும்.உண்மையான விசாவாக இருந்தால் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது அதே விசாவில் நகல் அந்த திரையில் தெரியும்.மேலும் Issue தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவையும் அந்த திரையில் தெரியும்.அதே சமையம் விசா போலியாக இருந்தால் Dismatch என்று திரையில் தெரியும்.

மேலும் Emigration Amer சென்டர், டஸ்கீர் சென்டர் மற்றும் அங்கீகாரம் பெற்ற Typing சென்டர் ஆகியவை வழியாகவும் உங்கள் வசாவின் உண்மை நிலையை சோதனை செய்ய முடியும்.

வெளிநாட்டினர் அமீரகத்தில் வேலைக்கோ அல்லது சுற்றுலாவுக்கோ வருவதற்கு முன்பு விசாவில் உண்மை நிலையை கண்டிப்பாக சோதனை செய்து உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்றும், சமூக வலைத்தளங்கள் வழியாக உள்ள விசா வியாபாரத்தில் சிக்கி ஏமாற கூடாது என்று அமீரக அரசு எச்சரிக்கை செய்துள்ளது.

குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்(Please News Don't Copy Shareall & Support our Page)

Reporting by Kuwait tamil pasanga team

Add your comments to Search results for Kuwait News

Saturday, August 17, 2019

குவைத் அரசின் சுகாதாரத் துறையில் 2000 செவிலியர்கள் உட்பட 2575 நபர்களுக்கு அரசு வேலை:

குவைத் அரசின் சுகாதாரத் துறையில் 2000 செவிலியர்கள் உட்பட 2575 நபர்களுக்கு அரசு  வேலை, இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயனடைவார்கள்:



குவைத்தின் சுகாதாரத் துறையில் 2575 பேரை பணியமர்த்த நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கியமாக 2000 செவிலியர்களுக்கு(Nursing) புதிதாக வேலை கிடைக்கும், மேலும் தொழில்நுட்ப வல்லுநர்கள்(Technicians) மற்றும் மருத்துவர்களை(Doctor)நியமிக்கவும்  நிதி துறை அமைச்சகம் இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய ஒப்புதல் மூலம் 2000 செவிலியர்களுக்கு, 575 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் மற்றும்  680 மருத்துவர்களுக்கும் புதிய வேலைகளை வழங்கவும்  இதற்காக 1,94,000 தினார் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நியமனங்கள் செய்வதற்கு ஏற்கனவே அமைச்சரவை மற்றும் சிவில் சர்வீஸ் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டது.

குவைத்தில் நடப்பு நிதியாண்டில் சுகாதார அமைச்சில் உள்ள மருத்துவமனைகளின் வருவாய் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. வருவாயின் அதிகரிப்பு முக்கிய காரணம் வெளிநாட்டினருக்கான சிகிச்சை கட்டணம் அதிகரிப்பதே ஆகும். மேலும்  நடப்பு நிதியாண்டில், சுகாதார அமைச்சின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் இருந்து 45 லட்சம் தினார்கள் வருமானம்  அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. இதை தவிர வெளிநாட்டவர்களிடமிருந்து ஆண்டுக்கு 108 மில்லியன் டாலர் சுகாதார காப்பீட்டு( Medical Insurance) கட்டணத்தையும் எதிர்பாராத அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் உட்பட,பல்வேறு பிரிவுகளில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக அரசு  துறையில் செவிலியர் தேர்வுகள் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த புதிய அறிவிப்பு இந்தியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Reporting by Kuwait tamil pasanga Team

News Don't copy without page Team permission

Add your comments to Search results for Kuwait News

Monday, August 12, 2019

குவைத்தில் சிவில் ஐடி பிழை திருத்தங்கள் உள்ளிட்ட பல ஆன்லைன் சேவைகள் ஆகஸ்டு 14-ற்கு பிறகு மட்டுமே மீண்டும் செய்ய முடியும்:


குவைத்தில் சிவில் ஐடி பிழை திருத்தங்கள் உள்ளிட்ட பல ஆன்லைன் சேவைகள் ஆகஸ்டு 14-ற்கு பிறகு மட்டுமே மீண்டும் செய்ய முடியும்:

குவைத்தின் Public Authority for Civil Information (PACI) எனப்படும் உள்துறை அமைச்சகத்தின் கீழு இயங்கி வரும் சிவில் ஐடி அலுவலகங்கள் வழியாக வழங்கப்பட்டு வருகிற சிவில் ஐடி சம்மந்தப்பட்ட கணினி தானியங்கி சேவைகள் உள்ளிட்ட பல சேவைகள் ஒரு வாரத்திற்கு பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.
எனவே வருகின்ற ஆகஸ்டு 14 வரையில் இந்த ஆன்லைன் சேவைகள் பெறமுடியாது. 

எனவே ஆகஸ்டு 14 ற்கு பிறகு மீண்டும்
சேவைகள் செயல்பாட்டிற்கு வரும் என்றும் குவைத்தின் பிரபல தினசரி பத்திரிகை Al-Qabas செய்தி வெளியிட்டுள்ளது.இந்த தற்காலிக தடைமூலம் பிறப்பு தேதி திருத்தங்கள்,விசா புதிதாக அடித்துள்ள குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் யாரும் புதிய சிவில் ஐடியை புதுப்பித்தல் செய்யும்  தானியங்கி சேவையை இந்த நாட்களில் பெற முடியாது.

மேலும் புதிதாக பெறப்பட்ட சிவில் ஐடியில் பெயரில் பலருக்கும் பிழை ஏற்பட்ட வண்ணம் உள்ளது.இந்த பெயர் திருத்தம் ஆன்லைன் சேவையும் மேற்குறிப்பிட்ட நாட்களில் பெற முடியாது. இதுதவிர
வீட்டுத் தொழிலாளர்கள் விசா தொடர்பான ஆன்லைன் பதிவுகள் மற்றும் குடும்ப விசா
(dependent visa) உள்ளிட்ட ஆன்லைன் சேவையும் இந்த நாட்களில் பெற முடியாது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reporting by Kuwait tamil pasanga Team

News Don't copy without page Team permission 

Add your comments to Search results for Kuwait News

Tuesday, August 6, 2019

குவைத்தில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இனிமுதல் உள்நுழைவு கட்டணம் வசூலிக்ககூடாது:


குவைத்தில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார்  ஆரம்ப சுகாதார நிலையங்களில் இனிமுதல் உள்நுழைவு கட்டணம் வசூலிக்ககூடாது:

குவைத்திலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆரம்ப சுகாதார  நிலையங்களில் இனிமுதல் உள்நுழைவு கட்டணம்(File Opening fees) வசூலிக்ககூடாது என்றும்,அது ரத்து செய்யப்பட்டது என்று குவைத் சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.உள்நுழைவு கட்டணம் என்பது நோயாளி எந்தவொரு சிகிச்சையும் எடுக்காத நிலையில் சிகிச்சைக்கு முன்பு வசூலிக்கும் கட்டணமாகும்.

குவைத் சுகாதாரத் துறை அமைச்சகத்தின்
தனியார் மருத்துவ துறைக்கான தலைமை அதிகாரி பாத்திமா-அல்-நஜார்  இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. குவைத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய உத்தரவை பின்பற்றாத தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். உள்நுழைவு கட்டணம்(File Opening fees) வசூலிப்பதை நிறுத்த வேண்டுமென்று  அரசிடம் கடந்த பல வருடங்களாக பாராளுமன்றத்தில் உறுப்பினர் பலர் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தது குறிப்பிடத்தக்கது.
பல வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம் குவைத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டணம் உயர்த்தப்பட்ட குறிப்பிடத்தக்கது. 

இதை காரணம் காட்டி சில தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி நோயாளிகளிடம் கொள்ளை லாபம் ஈட்டி வருகிறார்கள்.
இவ்வளவு இருந்ததும் நோயாளி எந்தவொரு சிகிச்சையும் பெறுவதற்கு முன்பே உள்நுழைவு கட்டணம்(File Opening fees) என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது.பல மருத்துவமனைகளும்
1 முதல் 5 தினார்கள் வரையில் சாதாரணமாக வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது.இதுவே தற்போது ரத்து செய்து சுகாதார துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் சில மருத்துவமனைகள் உள்நுழைவு கட்டணமாக(File Opening fees) பெரும் தொகையை வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.குவைத் சுகாதார துறை அமைச்சகத்தின் புதிய உத்தரவு குவைத்தில் குறைந்த வருமானத்தில் வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கு பெரும்  உதவியாக இருக்கும்.

Reporting by : Kuwait tamil pasanga Team

Note: News Don't Copy without page Team permission.








Add your comments to Search results for Kuwait News